ஹரி ஹர நாராயணன் - சுயவிவரம்
(Profile)
நடுநிலையாளர்
இயற்பெயர் | : ஹரி ஹர நாராயணன் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 03-Jun-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 13769 |
புள்ளி | : 14660 |
காற்றை பிடித்து கால்களில் கட்டியே ...
காலம் தாண்டி பறந்திடுவேன்.....
நிலவில் நின்று முகம் பார்ப்பேன்...
நிலத்தை வென்றே நான் இருப்பேன்..
நித்திரையில் கவி படைப்பேன்....
வானவில்லை கையில் எடுத்தே
வாழ்கையை வரைந்திருப்பேன் ..!
தமிழ் அன்னைத் தாலாட்டில்....
தனை மறந்தே துயில்வேன் நான்..!
கவிஞன் என்று எனை சொல்வர்
கவலை இன்றி வாழ்ந்திருப்பேன்...!
உயிர் போன பின்னாலும் - கவிதையாய்
உங்கள் உள்ளத்தில் நானிருப்பேன்...!
Email: sangeethahhn4@yahoo.com
cell : 9 8 9 4 1 4 8 5 0 5
வானவில்லுக்கு இறகுகள் முளைத்து
வண்ணத்துப் பூச்சியாய் அருகில் வந்தது.....
வண்ணத் தமிழ் மொழி இதயம் நிறைத்து
வளமாய் சிந்தனை அறிவில் தந்தது.....
வந்த கற்பனை கவிதை ஆனது
வருத்தம் என்பதும் இனிமை ஆனது....
வளர்ந்து பாருங்கள் வானமும் கீழே - சிந்தனை
வளர்த்துப் பாருங்கள் நீங்கள்தான் மேலே.....!!
விழுந்தாலும்
புன்னகைத்தது
சிறு பிள்ளையாய்
சிற்றருவி.......!
கபடமில்லை அதன் நடையும்
கவி நடையோ
அதிசயித்தேன்...!!
அ வ ள் சி ரி ப் பு
ச ரி க ம ப த நி
அ வ ள் நி னை ப் பு
சு வை யி ல் ப த னி
அ ழ கி ய ம தி யே
அ வ ள் வ டி வு நீ
அ ரு கி ல் ஒ ளி யே
அ வ ள் நி ழ ல் நீ.......
நிழலும் வெண்மையோ என
நீயும் கேட்கலாம் - பெண்ணே உன்
நினைவுகளில் கள்ளமில்லை
நிறைமதியே நீ வாழ்க வாழ்க.....!!
புவி ஈர்ப்பு விசையே
போதும் எனை எதிர்க்காதே...!!
வீழ்வேன் என நினைக்காதே
விருந்தாவேன் கதிரவனுக்கு...!!
உன்னில் புதைய மனமில்லை
உயரச் சென்றே மரணிப்பேன்....
என்னை வெல்ல எமனில்லை...
என் வாழ்வும் சாவும் என் கையில்....!!
மழை விழுகையில்
கூந்தலை குடையாய் பிடித்தாய்!
மழைக்கு பிறகும்
மழையில் நனைகிறேன்!
முத்து மழையில் அல்ல!
உன் முத்த மழையில்....
கணினிக்கும் காதல் வந்தால்,
Screenல் brightness அதிகரிக்கும்,
Camera தானாக அவளை
Capture செய்யும்,
Scree saver அவள் முகமாகும்,
Cpu சிறகடிக்கும்,
எழுத்துக்கள் வேகமெடுக்கும்,
கணக்குகளை கவிதைகளாக பொழியும்,
Folder அவள் பெயரால் நிறம்பும்,
Search செய்தால் flower ஐ காட்டும்,
இணையத்தில் இணைப்பின்றி கிடக்கும்,
Key bord பட்டன்கள் அரை inch எகிரி நிற்க்கும்,
அவள் வரும் நேரத்தை கூட்டிக்கொண்டிருக்கும்,
அவள் வந்துவிட்டாள்
நேரத்தை கழித்து காட்டும்..!
கடந்து அவள் போன பின்னே கயலான் கடையில் கிடக்கும்,
கல்லறையோ கயலான் கடையோ காதல் முடிவு ஒன்று தான்..!்
சொல்லத் தயங்கினேன்
சுகமில்லா வாழ்வுதனை .
மெல்ல மெல்ல என்னுள்ளம்
மேவின கவிதைகள் .
உள்ளமெங்கும் துயரங்கள்
உறங்காது எனைவாட்டச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .
காதலின் பொருள் அறியா
காதலர்கள் இருக்கும் வரை
காதலிலும் உண்மையில்லை
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .
கொலையும் கொள்ளையும்
நிறைந்ததோர் இவ்வுலகில்
வருந்தும் இதயத்தினால்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .
பள்ளிக்குச் செல்லுகின்ற
பாலகனோ கூலியாய்
அவதிப்படும் அவலநிலையைச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .
ஒருதலைக் காதலால் மோதல்
உண்டாகி கொலையும் கொடூர
காதல் கீதம் ஒன்று
நெஞ்சிலே நானும் இசைத்தேன் !
காற்றில் மிதந்து வரும் !
உன்னை தானே சேரவரும் !
சேரும் கனம் இன்பம்
பல தேடி வரும் !
மழலையை போல பேச்சிலா..............
கவிதையை போல மௌனத்திலா..............
எதிலே விழுந்தேன் !
எண்ணி தவழ்ந்தேன் !
மயங்கி கிடந்தேன் !
இன்பங்கள் வளர்த்தேன் !
எனக்கும் தெரியவில்லை - என்
காதலுக்கும் புரியவில்லை !
கனவிலும் தினமும் நீயடி !
வருவது ஏனோ சொல்லடி !
காதல் சொல்லும் பூங்கொடி !
ஒருமுறை என்னை பாரடி !
முக்கனிச் சுவையே !
முத்தமிழ் அழகே !
பவளக் கொடியே !
பொன்மயில் நடையே !
எத்தனை வர்ணனை.................
உன்னை நான் எண்ணும்போது
சின்ன வயதில் தாத்தாவோடு
சிரித்து எடுத்துக் கொண்ட புகைப் படம்
சிந்தனையில் வந்து பதியுது
சில்லென மனசும் குளிருது......!
அந்த தாத்தா இன்று இல்லை
அனுபவித்த அன்பும் எனக்கு இல்லை
அள்ளக் குறையாத செல்வம் உண்டு
அழுகையை தேற்ற ஒரு நாதி இல்லை...
எப்படி இறந்தது மனிதம் ?
எனக்குள் தேடினேன் புனிதம்
எடுடா முகமூடியை முகத்திலிருந்து
என்றது எனக்குள் மனசாட்சி....!
போடா போடா புண்ணாக்கு
போட்டுக் கொள்கிறேன் முகமூடி
பொழுது இப்போது புலர்ந்து விட்டது
புலி வேஷம் பசுவும் போட வேண்டும் - என்றேன் நான்....!!